பலன் தரும் ஸ்லோகம் (நல்லன அருளும் நடராஜர் தசகம்)

ஹர ஹர ஸங்கர பக்த ஹ்ருதம்பரவாஸ சிதம்பர நாதவிபோதுரித நிரந்தர துஷ்ட பயங்கரதர்ஸன ஸங்கர திவ்ய தனோ!தஸஸதகந்தர ஸேஷ ஹ்ருதந்தரஸங்கர ரக்ஷித பார்த்த குரோஜய ஜய ஹே நடராஜ பதேஸிவ பாக்ய ஸம்ருத்தி முபார்ஜய மே!!ஹர ஹர சங்கரா, எப்போதும் பக்தர்களுக்கு சுகத்தை அருள்பவரே, பக்தர்களின் இதயத்தில் வீற்றிருப்பவரே, சிதம்பர நாதரே, மகாபிரபுவே, இடைவிடாது பாபங்களைச் செய்யும் துஷ்டர்களுக்கு அச்சத்தை ஊட்டுபவரே, தரிசனம் செய்பவருக்கெல்லாம் முக்தியை அருள்பவரே, திவ்ய திருவுருவம் கொண்டவரே, ஆயிரம் தலையனான ஆதிசேஷனின் இதயத்தில் இடம் பெற்றவரே, துரோணருக்கு எதிரான யுத்தத்தில் அர்ஜுனனை ரட்சித்தவரே, அனைவருக்கும் குருவானவரே, உலகிற்கு நாயகனாக, மங்களநாதனாக விளங்கும் நடராஜப் பெருமானே, நமஸ்காரம். தாங்கள் சிறந்து விளங்க வேண்டும், எங்களுக்கு நிரம்ப பாக்கியங்களை அளிக்க வேண்டும்.(தில்லையில் நின்றாடி உலகைக் காக்கும் நடராஜப் பெருமானை குறித்து அனந்தராம  தீட்சிதர் இயற்றிய துதி, நடராஜ சதகம்.  இதில் பதினோரு ஸ்லோகங்கள் இடம்  பெற்றிருக்கும். இப்போது அதில் ஒன்றை மட்டும் நாம் கொடுத்திருக்கின்றோம்.  இதை தினமும் சொல்லி வந்தால் எல்லா வகையான நோய்களும் நீங்கும். நடராஜப்  பெருமானின் திருவருளால், அனைத்து நன்மைகளும் கிட்டும். மிக முக்கியமாக  30-12-2020 அன்று வரும் ஆருத்ரா தரிசனத்தன்று சொல்லுங்கள்.)…

Related posts

ஸ்ரீ ஷீரடி சாய் பாபாவின் மந்திரங்கள்

வாழ்க்கையை உயர்த்தும் வேல்ஞானம்

மன்னியது உன்திரு மந்திரம்