பறக்கும்படை சோதனை 75 பவுன் ஜிமிக்கி கம்மல் தாலிச்சரடு பறிமுதல்

விழுப்புரம்: விழுப்புரம்  பெரும்பாக்கம் பாலம் அருகே உள்ளாட்சி தேர்தலர் பறக்கும்படை அலுவலர்  தலைமையில், போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, அந்தவழியாக  நகரப்பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் வந்த நபரை பிடித்து சோதனையிட்டபோது,  ஏராளமான தங்க ஜிமிக்கி கம்மல், தாலிச்சரடு உள்ளிட்ட நகைகள் இருந்தது  தெரியவந்தது. இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்தவரிடம் விசாரணை நடத்தியபோது  அதேபகுதியைச் சேர்ந்த குமரன்(26) என்பதும், உரிய ஆவணங்களின்றி நகையை  எடுத்து வந்ததும் தெரிந்தது. இதனால் அவற்றை பறிமுதல் செய்து நகராட்சி அலுவலகத்திற்கு  கொண்டு சென்றனர். 598 கிராம் (75 பவுன்)  மதிப்பிலான நகையை கருவூலத்தில்  அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர். இதன் மதிப்பு ரூ.27 லட்சம். உரிய  ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட நகை வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய  எடுத்துச் செல்லப்பட்டதா, ஜூவல்லரி கடைக்குதான் கொண்டு சென்றனரா?  என்பது குறித்து விசாரணை நடக்கிறது….

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் அரிவாளால் வெட்டி படுகொலை!

தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் 15ல் தொடங்கி வைக்கிறார்: திருவள்ளூர் மாவட்டத்தில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு

ஒன்றிய அரசின் குற்றவியல் சட்டத்தை எதிர்த்து; திமுக சார்பில் நாளை உண்ணாவிரத போராட்டம்: சட்டத்துறை செயலர் என்.ஆர். இளங்கோ அறிவிப்பு