பர்கூர் மலை பகுதியில் கன மழையால் மண்சரிவு: தமிழகம்-கர்நாடகம் இடையே போக்குவரத்து துண்டிப்பு

அந்தியூர்: பர்கூர் மலை பகுதியில் பெய்த கனமழையால் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகம்- கர்நாடகம் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் அந்தியூர், பர்கூர் பகுதிகளில் 4வது நாளாக நள்ளிரவு கன மழை கொட்டி தீர்த்தது. இதில் அந்தியூரில் இருந்து பர்கூர் செல்லும் மலைப்பகுதி ரோட்டில் நெய்க்கரை பகுதியிலிருந்து செட்டிநொடி வரை சுமார் 1.5 கிலோ மீட்டர் தூரம் வரை மலைப்பகுதி ரோட்டில் மண் சரிந்தும், மரங்கள் மற்றும் பாறைகள் உருண்டு ரோட்டில் விழுந்து கிடக்கிறது.இதனால் நேற்று இரவு 10 மணிமுதல் அந்தியூரில் இருந்து பர்கூர், கர்கேகண்டி, ராமாபுரம், கர்நாடகா மாநிலம் செல்லும் அனைத்து போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பர்கூர் மலைப்பாதை வழியாக கர்நாடக மாநிலம் செல்லும் 200க்கும் மேற்பட்ட போக்குவரத்து வாகனங்கள் வரட்டுப்பள்ளம் வனச் சோதனை சாவடி அருகில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் மலைப்பகுதியில் உள்ள 33 மலைக் கிராமங்களுக்கும் செல்லும் போக்குவரத்து கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மண் சரிவை சரி செய்யும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்….

Related posts

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலி

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்