பருவமழை 2 நாளில் விடைபெறும்: 20ம் தேதி வரை கனமழை பெய்யும்

சென்னை,: தென்மேற்கு பருவமழை அடுத்த 2 நாட்களில் விடை பெறுவதற்கான சூழ்நிலை உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகம், புதுச்சேரி, கேரளா, மாகே பகுதிகளில் 20ம் தேதி வரை நல்ல மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் தென் மேற்கு பருவமழை கேரளாவில் பெய்யத் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்திலும் மழை பெய்தது. இந்நிலையில், நேற்றும் ஒரு சில இடங்களில் தமிழகத்தில் கனமழை பெய்தது. ஆந்திர கடலோரப் பகுதி, தெலங்கானா, தெற்கு கர்நாடகா மற்றும் கேரளாவிலும் கனமழை பெய்தது. அதில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கோதையாறு 130மிமீ மழை  பதிவாகியுள்ளது. மதுரை மாவட்டம் குப்பணம்பட்டி 100 மிமீ, வேதாரண்யம் 90மிமீ, பேச்சிப்பாறை, ஒகனேக்கல், காரைக்குடி, வாடிப்பட்டி, தனியமங்கலம் 70மிமீ, மழை பெய்துள்ளது. இந்நிலையில், வட மாநிலங்களில் பிலாஸ்பூர், பிரம்மபுரி, பெர்காம்பூர் பகுதிகளிலும், விதர்பா, சத்தீஷ்கர், மகாராஷ்ட்ரா, ஜார்கண்ட், ஒடிசா மாநிலத்தின் உள் பகுதிகள், ஆகியவற்றில் தென் மேற்கு பருவக் காற்று மற்றும் மழை விடை பெறும் சூழல் உருவாகியுள்ளது. இதற்கிடையே, மத்திய அரபிக் கடல் பகுதியில் கடல் மட்டத்தில்  இருந்து 3.1 கிமீ உயரத்திலும், கேரளாவை ஒட்டிய பகுதியிலும் ஒரு காற்றழுத்தம் உருவாகியுள்ளது. அதேபோல வடக்கு அந்தமான் பகுதி மற்றும் அதை ஒட்டிய பகுதியில்நாளை மறுநாள் ஒரு காற்றழுத்தம் உருவாக உள்ளது. இது மேற்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிக்கு வந்து பின்னர் 20ம் தேதி தென்மேற்கு வங்கக் கடல் பகுதிக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக இன்று அந்தமான் நிகோபார் பகுதிகள், மத்திய மகாராஷ்ட்ரா, தெற்கு கர்நாடகா, கேரளா,  தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில்  கனமழை பெய்யும். இதே நிலை 20ம் தேதி வரை நீடிக்கும். அதனால் தெற்கு வங்கக் கடல் பகுதியில் மணிக்கு 55 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்….

Related posts

மெரினா கடற்கரை அழகுபடுத்தும் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு எத்தனை கடைகள்?.. மாநகராட்சி பதில் தர ஐகோர்ட் உத்தரவு

குடியிருப்பில் நள்ளிரவு தீவிபத்து உடல் கருகி 2 குழந்தைகள் பலி: ஆபத்தான நிலையில் பெற்றோருக்கு சிகிச்சை

சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அலுவலகம், ஏர் கார்கோவில் மது, சிகரெட், குட்கா உபயோகிக்க தடை: சுங்கத்துறை ஆணையர் எச்சரிக்கை