பருவமழை துவங்கும் முன்பாக ஓடைகளை தூர்வார கோரிக்கை

 

கூடலூர்,ஜூன்1: கூடலூர் நகர் மற்றும் அதனை ஒட்டி ஓடும் சிற்றாறுகள், ஓடைகளில் புதர்கள் மண்டி வளர்ந்து இருப்பதால் மழைக்காலத்திற்கு முன் அவற்றை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
கூடலூர் நகராட்சிக்குட்பட்ட காசிம்வயல்,துப்பு குட்டிபேட்டை,கல்குவாரி,முதல் மைல்,இரண்டாவது மைல், மங்குழி,காளம்புழா,புறமான வயல்,வேடன் வயல் பகுதிகள் வழியாக ஓடும் ஓடைகள் சிற்றாறுகளில் தற்போது புதர்கள் வளர்ந்து காணப்படுகிறது.கடந்த சில வருடங்களுக்கு முன் இந்த ஆறுகளில் தூர்வாரப்பட்ட நிலையில் வெள்ளப்பெருக்கு காலங்களில் பாதிப்புகள் குறைவாக காணப்பட்டது.

கடந்த வருடம் மழை குறைவு காரணமாகவும் கடுமையான வெயில் காரணமாகவும் ஆறுகள் சிற்றோடைகளில் ஏராளமான புதர்கள் வளர்ந்து செடி கொடிகள் நிறைந்து காணப்படுகிறது. தென்மேல் பருவமழை துவங்க உள்ள நிலையில் மழை காலத்தில் வெள்ளப்பெருக்கு அதிகரித்தால் இந்த புதர்கள் காரணமாக கரையோர பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பருவமழை தூங்குவதற்கு முன் ஆறுகள் சிற்றோடைகளில் உள்ள புதர்களை அகற்றி சீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு