பருவமழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம் விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.97.92 கோடி வரவு: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தகவல்

சென்னை: வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:  தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட பயிர் சேதங்கள் குறித்த அறிக்கையை கடந்த ஆண்டு நவ.16ம் தேதி அமைச்சர்கள் குழு தமிழக முதல்வரிடம் சமர்ப்பித்தது. அதனைத் தொடர்ந்து பயிர்பாதிப்பு கணக்கெடுப்பின் அடிப்படையில் வடகிழக்கு பருவமழை காலத்தில் சேதமடைந்த 4,44,988 ஏக்கர் பரப்பளவிற்குரிய 3,16,837 விவசாயிகளுக்கு நிவாரணத் தொகையாக ரூ.168 கோடியே 35 லட்சம்  விடுவிக்கப்பட்டது. வேளாண் பெருமக்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டுள்ள முதல்வர், ஒன்றிய அரசின் பேரிடர் நிதியை எதிர்பார்த்து காத்திராமல் மாநில அரசின் நிதிமூலம் ரூ.168.35 கோடி விடுவித்தார். பொங்கல் திருநாளை முன்னிட்டு, நிவாரண நிதி விடுவிப்பதில் சிறு தடங்கல் ஏற்பட்டது. தற்போது வரை சேதமடைந்த வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு நிவாரணமாக ரூ.97.92 கோடி 2,23,788 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. எஞ்சிய விவசாயிகளுக்கு நிவாரண நிதி விடுவிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில்   2 நாளில் வரவு வைக்கப்படும்….

Related posts

அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அம்மா உணவக ஊழியர்களுக்கு 8 ஆண்டுக்கு பின் ஊதிய உயர்வு: சென்னை மாநகராட்சி நடவடிக்கை; பொதுமக்கள் பாராட்டு

உளவுத்துறையில் கழிவுசெய்யப்பட்ட 27 வாகனங்கள் 11ம் தேதி ஏலம்: காவல்துறை அறிவிப்பு

ஓடும் பேருந்தில் நடத்துனர் பலி