பரமத்தி அருகே கொசு மருந்து அடிக்க கோரிக்கை

 

க.பரமத்தி, அக்.22: க.பரமத்தி ஒன்றியம் சின்னதாராபுரம் ஊராட்சியில் கடைவீதி, அக்ரஹாரம், ஒத்தமாந்துரை, தன்னாசியப்பன்கோவில் தெரு, நேருநகர், சிவசக்திநகர், மலைச்சியூர்பிரிவு, அண்ணாநகர், இந்திராநகர், நாவல்நகர் போன்ற பல்வேறு பகுதிகள் உள்ளன. கடந்த வாரத்தில் பெய்த மழை காரணமாக அதிகளவு கொசுக்கள் உற்பத்தியாக இப்பகுதி மக்களை பாடாய்படுத்தி வருகிறது.

மேலும், கொசுக்கடி காரணமாக இப்பகுதியை சேர்ந்த குழந்தைகளும், பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகளுக்கு காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளது. ஒரு சிலருக்கு காய்ச்சலால் அவதிப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சூழலில் உள்ளனர். இதற்கு, இப்பகுதியை சுற்றிலும் அசுரத்தனமாய் வளர்ச்சி கண்டுள்ள கொசுவினை ஒழிக்க சுகாதாரத்துறையினர் போதிய நடவடிக்கை எடுக்காததே காரணமாக உள்ளது என அப்பகுதியினரால் கூறப்படுகிறது.

Related posts

சட்டப்பேரவை குழு விருதுநகரில் இன்று ஆய்வு

நரிக்குடி அருகே ரேஷன் பொருட்கள் வாங்க கண்மாய் நீரை கடந்து செல்லும் கிராமமக்கள்: ஊரில் புதிய கடை திறக்கப்படுமா?

சிவகாசியில் மாநில அளவிலான கராத்தே போட்டி