பரமத்திவேலூர் அருகே சோதனை கரும்பாலையில் பதுக்கிய 1300 அஸ்கா சர்க்கரை பறிமுதல் அதிகாரிகள் அதிரடி

பரமத்திவேலூர், ஜூன் 29: பரமத்திவேலூர் அருகே கரும்பாலையில் அதிரடியாக நடத்திய சோதனையில், குண்டு வெல்லம் தயாரிப்பில் கலப்படம் செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1300 கிலோ அஸ்கா சர்க்கரை மற்றும் வேதிப்பொருட்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரை அடுத்துள்ள பிலிக்கல்பாளையம் பகுதிகளில் குண்டுவெல்லம், நாட்டு சர்க்கரை தயாரிக்கும் ஆலை கொட்டகைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு, தயாரிக்கப்படும் பொருட்களில் அதிகளவில் அஸ்கா சர்க்கரை கலக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதன்பேரில், கபிலர்மலை மற்றும் பரமத்தி உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துசாமி ஆகியோர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, சின்னாம்பள்ளி மேடு பகுதியில் இயங்கும் கரும்பாலையில் கலப்படம் செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1300 கிலோ அஸ்கா சர்க்கரையை கைப்பற்றினர். இதுதொடர்பாக எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும், வேதிப்பொருட்கள் மற்றும் அஸ்கா சர்க்கரை கலப்படம் செய்யக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது. கலப்படம் செய்வது கண்டறியப்பட்டால் ஆலை கொட்டக்கைகள் சீல் வைக்கப்படுவதுடன், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு அதிகாரி முத்துசாமி தெரிவித்தார்.

Related posts

கிராமத்தில் புகுந்த ஒற்றை யானை விரட்டியடிப்பு

சாமியார் கொலையில் மேலும் ஒருவர் கைது வள்ளிமலை அருகே நடந்த

₹3.50 கோடி ஜிஎஸ்டி பாக்கி தகவலால் வேலை தேடும் வாலிபர் அதிர்ச்சி நடவடிக்கை கோரி வேலூர் கலெக்டரிடம் புகார் பான் எண் மூலம் கோவையில் போலி நிறுவனம்