பரமத்திவேலூரில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

பரமத்திவேலூர், செப்.14: சதுர்த்தி விழாவையொட்டி, பரமத்தி வேலூர் பகுதியில் இந்து முன்னணி சார்பில் 58 விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டது. அந்த சிலைகள் அனைத்தும் நேற்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, காவிரியில் கரைக்கப்பட்டது. இதனையொட்டி, நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு இந்து முன்னணி பரமத்தி ஒன்றிய தலைவர் ராஜவேல் தலைமை வகித்தார். வேலூர் நகர செயலாளர் கோபிநாத் வரவேற்றார். பரமத்தி ஒன்றிய செயலாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு இந்து முன்னணி மாநில அமைப்பாளர் பொன்னையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். விநாயகர் சிலை ஊர்வலத்தை நாமக்கல் மேற்கு மாவட்ட பாஜ செயலாளர் பத்மராஜா தொடங்கி வைத்தார். எஸ்.பி., ராஜேஸ்கண்ணா தலைமையில், 7 டிஎஸ்பிக்கள், 19 இன்ஸ்பெக்டர் மற்றும் 350க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related posts

திருச்சி மாவட்ட மைய நுாலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு ஒதுக்கீடுகள் வழிகாட்டு நிகழ்ச்சி

ஸ்ரீரங்கத்தில் ‘இந்தியா துாய்மை தினம்’ குறித்த விழிப்புணர்வு மனித சங்கிலி

திருச்சி மாவட்ட கோர்ட் வளாகத்தில் இதய நோய் சிறப்பு மருத்துவ முகாம்