பரமக்குடி வட்டார அளவில் மாணவ, மாணவிகளுக்கான கலைத்திருவிழா

பரமக்குடி, அக். 28: பரமக்குடி வட்டார அளவிலான ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பாக மாணவ மாணவிகளுக்கான கலைத்திருவிழா நடைபெற்றது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி ராமநாதபுரம் மாவட்டம் சார்பாக பரமக்குடி வட்டார அளவிலான 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கான கலைத் திருவிழா போட்டிகள் முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா உத்தரவின்பேரில், கேஜே.முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியினை ஆசிரியர் பயிற்றுனர் வளர்மதி வரவேற்றார். பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் கலைத் திருவிழாவை தொடங்கி வைத்தார். கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் அஜ்மல் கான், நகர மன்ற தலைவர் சேது கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கலைத் திருவிழாவில் 81 மாணவர்கள் தனித்திறன் போட்டியிலும், 27 குழுக்கள் வெற்றி பெற்று மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர்கள் ரவிக்குமார், சுதாமதி பெருமாள் கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திருநீலகண்ட பூபதி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியி நிறைவாக வட்டார மேற்பார்வையாளர் பாண்டீஸ்வரி நன்றி கூறினார்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை