பரமக்குடி அருகே அம்மன் கோயிலில் பவுர்ணமி பூஜை

பரமக்குடி, ஆக.2: பரமக்குடி அருகே பெரிய அக்கிரமேசி கிராமத்தில் உள்ள வாலேஸ்வரி அம்மன் திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாக திகழ்கிறது. இங்கு, பவுர்ணமி பூஜையை முன்னிட்டு வாலேஸ்வரி அம்மனுக்கு ,பால், பன்னீர், மஞ்சள், திரவியம் கரும்புச்சாறு, எலுமிச்சை, கங்கா தீர்த்தம், பஞ்சகவியம் உள்ளிட்ட சுமார் 15 வகையான பொருட்களுடன் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

விநாயகர், சோனையா சாமி, இருளன், கருப்பணசாமி, ராக்கச்சி அம்மன், இருளாயி அம்மன், வீரமாகாளி ஆகிய பரிபால தெய்வங்களுக்கும் பூஜை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, நயினார்கோவில் பாண்டி குருக்கள் தலைமையில் திருமண தடை நீங்குதல், குழந்தை வரம், தொழில் வியாபாரம், கல்வி சிறப்படையவும் சிறப்பு பூஜைகள் செய்து செய்யப்பட்டது. இதில் ராமநாதபுரம்,பரமக்குடி, நயினார்கோவில் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த ஏராளமான ஆன்மீக பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை