பரமக்குடியில் மாரியம்மன் கோயில் முளைக்கொட்டு விழா

பரமக்குடி, அக். 8: பரமக்குடி மேலச்சத்திரம் மும்முனை ஸ்ரீ சித்துமுத்து மாரியம்மன் கோயிலில் மழைவேண்டி முளைகொட்டு விழா நடைபெற்றது. பரமக்குடி ஓட்டப்பாலம் மேலரச்சத்திரம் பகுதியில் உள்ள ஸ்ரீ சித்து முத்து மாரியம்மன் கோயிலில் மழை வேண்டி ஆண்டு தோறும் முளைப்பாரி திருவிழா நடைபெறும். இதன்படி 38ம் ஆண்டு முளைப்பாரி திருவிழா, கடந்த 29ம் தேதி காப்பு கட்டுடன் தொடங்கியது. இதையொட்டி தினந்ேதாறும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் வழிபாடுகள் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து பெண்கள் கும்மியடித்தும், ஆண்கள் ஒயிலாட்டம் நடத்தியும் திருவிழாவை கொண்டாடினர். இந்நிலையில் நேற்று வைகை ஆற்றில் அம்மன் கரகம் எடுத்து பாரி கொலுவிற்கு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. அதனைத் தொடர்ந்து பாரி கொலுவிற்கு பெண்கள் கும்மியடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒப்பந்ததாரர் பழ.சரவணன் வரவேற்றார்.

நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி, துணைத்தலைவர் குணா ஆகியோர் முன்னிலை வைத்தனர். இறுதியில் கவுன்சிலர் பாக்கியம் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் பெரியசாமி, செயலாளர் பரமசிவம், பொருளாளர் சம்பத்குமார் உள்ளிட்டோர் செய்தி இருந்தனர். இத்திருவிழாவில், மேலசத்திரம், கோவிந்தபுரம், வசந்தபுரம், சிங்காரத்தோப்பு, மருதுபாண்டி நகர் பகுதிகளை சேர்ந்த பெண்கள் பலரும் முளைப்பாரி சுமந்து சென்று வைகை ஆற்றில் கரைத்தனர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்