பரமக்குடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

பரமக்குடி, பிப்.9: பரமக்குடி அரிமா சங்கத்தின் சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு அரிமா சங்க தலைவர் ஜெகந்நாதன் தலைமை தாங்கினார். அரிமா சங்க நிர்வாகிகள் பாஸ்கர பாண்டியன். மனோகரன். ஜெகந்நாதன். மருத்துவர்கள் ராமதாஸ். பார்த்தசாரதி, சுப்பிரமணியன், மணிமாறன் பாலசுப்ரமணியன், வழக்கறிஞர் தினகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரிமா சங்க நிர்வாகி முகம்மது உமர் வரவேற்புரை ஆற்றினார்.

விழாவில் அரிமா சங்கத்தின் மாவட்ட ஆளுநர் பிரான்சிஸ் தலைமையில் மற்றும் பரிமளா ரவி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினர். தையல் மிஷின். மூன்று சக்கர வாகனம். அயன்பாக்ஸ். சேலை. வெங்கிட்டன்குறிச்சி மருத்துவமனைக்கு இருபது ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது. மீனாட்சி அம்மன் கோயிலில் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை