பரமக்குடியில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பரமக்குடி, பிப். 28: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தரின் உருவ பொம்மையை எரித்து தாய் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தாய் தமிழர் கட்சியின் நிறுவனத் தலைவர் பி.எம்.பாண்டியன் தலைமையில் 35க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் காவிரி நதிநீர் மேலாண்மை விஷயத்தில் தமிழக அரசு எதிராக செயல்படும் ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷமிட்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். மேலும் ஒன்றிய அரசின் உத்தரவின் பேரில் ஆணைய தலைவர் ஹல்தர் ஒரு தலை பட்சமாக செயல்படுவதாக குற்றசாட்டை முன் வைத்த தாய் தமிழர் கட்சியினர், அவரது உருவபொம்மையை எரித்து கண்டனத்தை தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு