பரங்கிப்பேட்டை அருகே தனியார் மணல் குவாரியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்

புவனகிரி, ஆக. 10: பரங்கிப்பேட்டை அருகே உள்ள அத்தியாநல்லூர் கிராமத்தில் தனியார் மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியிலிருந்து ஏராளமான லாரிகளில் மணல் எடுக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நிர்ணயித்த அளவை விட அளவுக்கு அதிகமாக மணல் எடுத்ததாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கிராம பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் சார்பில் கடலூர் மாவட்ட அதிகாரிகளுக்கு புகார்கள் அனுப்பப்பட்டன. ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் இந்த பகுதியைச் சேர்ந்த சுமார் 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நேற்று மணல் குவாரி செயல்படும் இடத்திற்கு சென்றனர். பின்னர் மணல் குவாரியை முற்றுகையிட்டு கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முறைகேடுகளில் ஈடுபட்டு வரும் தனியார் மணல் குவாரியை மூட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்