பயோடின் மாத்திரைகள் எதற்காக?

பயோடின் என்ற புரதச்சத்து தினந்தோறும் நம் உடலுக்குத் தேவைப்படுகிறது. புரதம் அதிகம் நிறைந்துள்ள உணவு வகைகளை நாள்தோறும் எடுத்துக்கொள்வது அவசியம். ஆனால் நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் புரதம் பற்றாக்குறையாகவே கிடைக் கிறது. புரதச்சத்து சரியான அளவு உடலுக்கு கிடைக்காவிட்டால் உடலுக்கு தேவையற்ற பிரச்சனைகள் வருகிறது. உதாரணத்திற்கு முடி உதிர்வு ஏற்படும். இதை சரியான நேரத்தில் கவனிக்காவிட்டால் அதிகப்படியான முடி உதிர்ந்துவிடும். இதை சமநிலைப்படுத்த பயன்படுத்தப்படும் மாத்திரையே பயோடின். உடலில் புரதச்சத்து குறையும்போது இந்த வகை பயோடின் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும்போது புரதம் முழுவதுமாக கிடைத்துவிடுகிறது. முட்டையின் வெள்ளைப் பகுதி, மீன், சிக்கன், முளைகட்டிய பயறு வகைகள் போன்றவற்றில் புரதம் நிறைந்துள்ளது. இவற்றில் இருந்து பெறப்பட்டதுதான் பயோடின் மாத்திரை.பயோடின் மாத்திரைகள் முடி உதிர்வு பிரச்சனைகள் மற்றும் புரதச் சத்து பற்றாக்குறையால் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் மருத்துவரின் பரிந்துரையின்பேரில் பயன்படுத்தலாம். உடலை கட்டுக்கோப்பாக வைக்கவும், கட்டமைக்கவும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக முடி உதிர்வைக் குறைத்து கட்டுக்குள் கொண்டு வருவதில் இந்த மாத்திரைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Related posts

பிரபாஸ் போல் வலுவாக… ஃபிட்னெஸ் டிப்ஸ்!

கண் கருவளையம் தடுக்கும் வழிகள்!

புதினா நீரின் நன்மைகள்!