பயிர் சேத விபரங்களை கண்டறிந்து அறிக்கை தயாரிக்க குழு அமைப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு..!

சென்னை: தமிழகத்தில் மழை வெள்ளத்தில் இருந்து பயிர்களைக் காப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மழை வெள்ளம் பாதித்த டெல்டா மாவட்டங்களில் பயிர் சேத விவரங்களைப் பார்வையிட்டு அறிக்கை அளிக்க அமைச்சர்கள் குழு அமைத்து  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் பல பகுதிகளில், குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் பரவலாகப் பெய்து வரும் கனமழையின் காரணமாக பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன.  இதுகுறித்து ஆய்வு செய்து, தற்போது பயிர்களைக் காப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவும், பயிர் சேத விவரங்களை அறியவும், அமைச்சர்கள் அடங்கிய குழு ஒன்றினை கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி அவர்கள் தலைமையில் அமைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று உத்தரவிட்டுள்ளார். இந்தக் குழுவில், தொழில் துறை அமைச்சர்தங்கம் தென்னரசு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் திரு. எஸ். ரகுபதி, மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாண்புமிகு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் துறை அமைச்சர் திரு.சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.  இந்தக் குழுவினர் உடனடியாக டெல்டா மாவட்டங்களுக்குச் சென்று, பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு, நிவாரண நடவடிக்கைகளை துரிதப்படுத்திட ஏதுவாக முதலமைச்சர் அவர்களுக்கு அறிக்கை தர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்….

Related posts

மருத்துவம் படிக்காமல் கிளினிக் நடத்திய போலி மருத்துவர் பிடிபட்டார்

தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சாத்தியக்கூறு உள்ள பகுதிகளில் கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி

திருச்சியில் தனலட்சுமி சீனிவாசன் பைனான்ஸ் புதிய கிளை திறப்பு விழா