பயணிகள் கவனத்திற்கு!: சென்னையில் இன்று முதல் வாரத்தின் அனைத்து நாட்களிலும் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கம்..!!

சென்னை: சென்னையில் இன்று முதல் வாரத்தின் அனைத்து நாட்களிலும் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் செயல்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவையை தினசரி பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். காலை முதல் இரவு வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பெருந்தொற்று காரணமாக ரயில் சேவை நேரத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. தற்போது நிலைமை சீரடைந்து பழையபடி முழு வீச்சில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு சென்னை மெட்ரோ ரயில்கள் வார நாட்களில் காலை 5.30 மணி முதல் 11 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமையில் காலை 7 மணி முதல் 10 மணி வரையும் இயக்கப்பட்டன. இந்த நிலையில் பொதுமக்கள் மற்றும் மெட்ரோ ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு இன்று முதல் அனைத்து நாட்களிலும் காலை 5 மணியில் இருந்து இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை நெரிசல் மிகுந்த நேரங்களில் 5 நிமிட இடைவெளியிலும் மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது….

Related posts

விளையாட்டு மைதானத்தில் குப்பை, கட்டிட கழிவு கொட்டுவதற்கு எதிர்ப்பு: இளைஞர்கள் சாலை மறியல்

ஊராட்சி தலைவர் வீட்டில் கல்வீச்சு 20 பேர் மீது வழக்கு

பிளஸ் 2 படித்துவிட்டு கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர் கைது: சுகாதாரத்துறை நடவடிக்கை