பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் விமான சேவை 200 ஆக உயர்வு

மீனம்பாக்கம்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கடந்த ஏப்ரல் மாதம் பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்ததையடுத்து விமான சேவைகளும் பாதியாக குறைந்தது. ஒரு நாளுக்கு 60 லிருந்து 70 விமானங்கள் தான் இயக்கப்பட்டன. இந்த விமானங்களில் 2 ஆயிரத்தில் இருந்து 3 ஆயிரம் பயணிகள் மட்டுமே பயணம் செய்தனர். இதனால் சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமானநிலையத்தில் போதிய பயணிகள் இல்லாமல் தினமும்     90 விமானங்கள் வரை ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறையத்தொடங்கியுள்ள நிலையில், 3வது அலை தொடங்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் விமான பயணம் பாதுகாப்பானது என்பதால் பயணிகள் பலர் வருகை தருகின்றனர். இதனால்சென்னை விமான நிலையத்தில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து பயணிகள் எண்ணிக்கையும் விமானங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கியுள்ளன. சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் கடந்த மே மாதம் கடைசி  வாரத்தில்  புறப்பாடு விமானங்கள் 40, வருகை விமானங்கள் 40 மொத்தம் 80 விமானங்கள் இயக்கப்பட்டு 4 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பயணம் செய்துள்ளனர். ஜூலை முதல் வாரத்தில் இருந்து மேலும் அதிகரித்து ஒரு நாளுக்கு சுமார் 15 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பயணம் செய்துள்ளனர். சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் வருகை விமானங்கள் 70 ஆகவும் புறப்பாடு விமானங்கள் 70  ஆகவும் ஆக மொத்தம் 140 விமானங்களில் 15 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பயணித்தனர். இந்த நிலையில், ஆகஸ்ட் முதல் தேதியில் இருந்து சென்னை உள்நாட்டு  விமானநிலையத்தில் விமானங்கள், பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகமாகியுள்ளன. சென்னையில் இருந்து நேற்று முன்தினம்  புறப்பட்ட  100 உள்நாட்டு விமானங்களில் 12,844 பேர் பயணித்துள்ளனர். வெளிமாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்த 100  விமானங்களில் சுமார் 13,556 பேர் பயணம் செய்துள்ளனர். சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் ஒரே நாளில் 200 விமானங்களில் மொத்தம் 26,400 பேர் பயணித்துள்ளனர். சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் கடந்த ஜனவரி மாதத்துக்கு பின்பு இந்த மாதம் முதல் மீண்டும் பயணிகள் எண்ணிக்கை  அதிகரித்துள்ளன. பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக டில்லி, மும்பை,  ஐதராபாத், பெங்களூரூ, கொல்கத்தா, அகமதாபாத், கொச்சி, தூத்துக்குடி கோவை ஆகிய நகரங்களுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை