பயணிகளை ஏற்றி செல்ல மறுப்பு கண்டக்டர், டிரைவர் உரிமம் ரத்து அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் உடனடி நடவடிக்கை

கடலூர், டிச. 2: கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள பஸ் நிலையத்திற்கு தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கடலூரில் இருந்து விருத்தாசலம் செல்லும் ஒரு தனியார் பேருந்தில் தினந்தோறும் குறிஞ்சிப்பாடி செல்லும் பயணிகளை ஏற்றிச் செல்லாமல், பேருந்துகள் இயக்கப்படுவதாக புகார்கள் எழுந்தது. அதன்படி நேற்று முன்தினமும் ஒரு தனியார் பேருந்து நடத்துனர், குறிஞ்சிப்பாடி செல்லும் பயணிகள் இதில் ஏற வேண்டாம். இது குறித்து பயணிகள் கேட்டபோது, அவர் பயணிகளிடம் தகாத முறையில் பேசியதாகவும், நாங்கள் இப்படித்தான் செய்வோம், யாரிடம் வேண்டுமானாலும் நீங்கள் புகார் செய்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. மேலும் இது குறித்து தொகுதி எம்எல்ஏவும், அமைச்சருமான எம்ஆர்கே பன்னீர் செல்வம் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அதன் பேரில் அவர் சம்பந்தப்பட்ட தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலரிடம் கேட்டுக் கொண்டார். இதையடுத்து கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் சம்பந்தப்பட்ட தனியார் பேருந்து கண்டக்டர் மற்றும் டிரைவரை பேருந்தோடு வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு வரவழைத்து, விசாரணை நடத்தி, பேருந்து டிரைவர் மற்றும் நடத்துனரின் உரிமத்தை ரத்து செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு