பனையூர் ஏரி நிரம்பியதால் சாலை தண்ணீரில் மூழ்கியது 10 நாட்களாக பொருட்களை வாங்க செல்ல முடியாமல் பொதுமக்கள் தவிப்பு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கண்ணமங்கலம் அருகே உள்ள அமர்தி வனப்பகுதி மற்றும் செண்பகத்தோப்பு அணை நிரம்பி வருவதால், தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், ஆரணி, கண்ணமங்கலம் பகுதியில் உள்ள  நாகநதி மற்றும் கமண்டல நாகநதி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக,  ஆரணி சுற்றுவட்டார பகுதியில் உள்ள  ஏரிகளுக்கு உபரிநீர் வரத்து அதிகரித்து ஏரிகள் நிரம்பி வழிகிறது. ஆரணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பனையூர் ஊராட்சியில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய ஏரி 365 ஏக்கர் பரப்பளவு கொண்டுள்ளது. இந்த ஏரி கடந்த 6 ஆண்டுகளுக்கு பிறகு, முழு கொள்ளளவு எட்டியது. கொள்ளளவை எட்டியதால் வடக்குமேடு, பனையூர் ஆகிய 2 கிராமங்களில் தண்ணீர் புகுந்தது. ஒட்டந்தாந்தாங்கல் கிராமத்தில் 60 க்கும்  மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு வடக்குமேடு- ஒட்டந்தாங்கல் செல்லும் சாலை உபரி நீரால் மூழ்கிவிட்டது.     இதனால், கடந்த 10 நாட்களுக்கு மேலாக கிராம மக்கள் சாலையை கடந்து செல்ல முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.  அதேபோல்,  பொதுமக்கள் அன்றாட  தேவைகளுக்கும், ரேசன் பொருட்கள் வாங்கவும், கூட்டுறவு சங்கத்திற்கு பால் கொண்டு செல்ல முடியாமலும், விவசாயத்திற்கு தேவையான இடுபொருட்கள் மற்றும் நிலத்தில் சாகுபடி செய்த பொருட்களை எடுத்து செல்ல முடியாமலும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், தண்ணீர் முழ்கியுள்ள சாலையினால்,  பள்ளி, கல்லூரி மாணவர்கள், சிறுவர்கள் அவதிபடுகின்றனர். அதேபோல், இரவு நேரத்தில் அவசர தேவைகளுக்கும், மருத்து சிகிச்சைக்கும், வெளியே சென்று விட்டு திரும்போது, தண்ணீரில் ஆழம் தெரியாமல் விழுந்து காயம் அடைகின்றனர்.  இதுதவிர, ஏரி நிரம்பியுள்ள பகுதியில் எச்சரிக்கை பலகைகள் ஏதும் வைக்காமல் இருப்பதால், சிறுவர்கள் ஆபத்தை உணராமல் ஏரியில் இறங்கி குளித்து வருகின்றனர். இதனால், ஏரிக்கு வரும் உரிநீரை பனையூர் மடுகு பகுதியில் திருப்பிவிடும்படி, சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடமும், ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், நாளுக்கு நாள் சாலையில் தண்ணீர் மட்டம் உயர்ந்து வருவதால், அவசர தேவைகளுக்கு கூட வெளியில் செல்லமுடியாமல் பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இப்பகுதியில் பேராபத்து ஏற்படுவதற்கு முன்பு பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி, மாவட்ட நிர்வாகம் உடனடியாக பனையூர் ஏரிக்கு வரும் தண்ணீரை மாற்று வழிகளில் திருப்பிவிட்டு, ஒட்டந்தாங்கல் கிராமத்திற்கு செல்லும் சாலையில் மூழ்கியுள்ள தண்ணீரை அகற்றி, தற்காலிகமாக சாலை ஓரங்களில் தடுப்பு சுவர்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

Related posts

அக்டோபர் 2ம் தேதி திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை ஒட்டி காலை 10 மணி முதல் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்!

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு அரசு கண்டனம்

கொடைக்கானலில் தொடரும் இ-பாஸ் நடைமுறை!