பனீர் பட்டர் மசாலா

எப்படி செய்வது?நறுக்கிய வெங்காயம், தக்காளி, முந்திரிப்பருப்பு
மூன்றையும் நன்றாக மிக்ஸியில் அரைத்து வைக்கவும். ஒரு பவுலில் தயிர்,
இஞ்சி, பூண்டு விழுது அதனுடன் மிளகாய்த்தூள், பனீர் இவை அனைத்தையும் போட்டு
நன்றாக பிரட்டி வைக்கவும். கடாயில் ஒரு தேக்கரண்டி ஆயில் விட்டு பிரட்டி
வைத்த பனீரை இருபக்கமும் பொன்னிறமாக வறுக்கவும். (அதிகம் வேக வைக்கக்
கூடாது) கடாயில் பட்டரைப் போடவும். மிளகு, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து
நன்றாக வதக்கிய பிறகு அரைத்த தக்காளியை சேர்த்து மிக்ஸியில் பச்சை வாசனை
போக பால் சேர்த்து அத்துடன், உப்பு சேர்த்து 5 நிமிடம் மூடி வைக்கவும்.
பிறகு மல்லித்தழை தூவி இறக்கி வைக்கவும். இதனுடன் சப்பாத்தி, பரோட்டா
சேர்த்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.

Related posts

கோலாபுரி மட்டன் குழம்பு!

கேப்சிகம் மசாலா கிரேவி

வெள்ளரிக்காய் பருப்பு குழம்பு