பனியில் இருந்து மலை காய்கறிகளை பாதுகாக்க ஸ்பிரிங்லர் மூலம் தண்ணீர் பாய்ச்சும் பணி துவக்கம்

 

ஊட்டி,ஜன.19: பனி மற்றும் வெயிலில் இருந்து மலை காய்கறிகள் பாதிக்காமல் இருக்க தற்போது ஸ்பிரிங்லர் மூலம் தண்ணீர் பாய்ச்சும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் இறுதி வாரம் முதல் நீர் பனிப்பொழிவு காணப்படும். தொடர்ந்து உறைபனி காணப்படும். இச்சமயங்களில், மலை காய்கறிகள் மற்றும் தேயிலை செடிகள் பாதிக்கும்.

கடந்த வாரம் வரை நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வந்தது. மழை குறைந்த நிலையில் தற்போது பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. பகல் நேரங்களில் வெயிலும் இரவு நேரங்களில் உறைபனியும் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக, ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது. இதனால் புல்வெளிகள்,மலை காய்கறிகள், தேயிலை செடிகளும் பாதித்து வருகிறது.

குறிப்பாக, மலை காய்கறி செடிகள் பனியில் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதனால் பனியில் இருந்து மலை காய்கறிகளை பாதுகாக்கும் பொருட்டு தற்போது அனைத்து பகுதிகளிலும் காலை நேரங்களில் பயிர்களுக்கு ஸ்பிரிங்லர் மூலம் தண்ணீர் பாய்ச்சும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். பெரும்பாலானோர் மைக்ரோ ஸ்பிரிங்லர் மூலம் தண்ணீர் பாய்ச்சி பனியில் இருந்து காய்கறி பயிர்களை பாதுகாத்து வருகின்றனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை