பனிமூட்டத்தால் மேற்கு வங்கத்தில் விபத்து: உயிரிழந்த 13 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க பிரதமர் மோடி உத்தரவு!!

கொல்கத்தா : மேற்கு வங்கத்தின் ஜல்பாய்குரியிலுள்ள தூப்குரியில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளதோடு, பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து உதவித்தொகையும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டம் துப்குரி நகரில் அடர் பனிமூட்டம் காரணமாக நேரிட்ட சாலை விபத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 18 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில் மேற்கண்ட சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்திகயில், “ஜல்பாய்குரியிலுள்ள (மேற்கு வங்காளம்) தூப்குரியில் நேரிட்ட சாலை விபத்து மிகவும் வேதனைக்குரியது. இந்த துயர தருணத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரார்த்தனை செய்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்.மேற்கு வங்காளத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 இலட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும்”, என்று குறிப்பிட்டுள்ளார்….

Related posts

நாடாளுமன்றத்தின் செயல்பாடுகளில் ஆரம்பமே சரியில்லை.. புகார்களை அடுக்கிய சோனியா காந்தி!!

லடாக் எல்லையில் ராணுவ பயிற்சியின்போது டாங்க் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 5 வீரர்கள் உயிரிழப்பு..!!

ரயில் ஓட்டுநர்களுக்கு தொடர்ச்சியாக நான்கு நாட்களுக்கு மேல் இரவு பணி ! போதுமான ஓய்வு இல்லை ! விபத்துகள் அதிகரிப்பு : மதுரை எம்.பி.சு.வெங்கடேசன்