பனிச்சரிவில் சிக்கி பலியான 7 ராணுவ வீரர்கள் உடல் சொந்த ஊருக்கு சென்றன

டெஸ்பூர்: அருணாச்சல் பிரதேசத்தில் பனிச்சரிவில் சிக்கி பலியான 7 ராணுவ வீரர்களின் உடல்கள் அவர்களுடைய சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அருணாச்சல் பிரதேசத்தில் உள்ள தமால் எல்லையில் உள்ள காமெங் செக்டாரின் மிக உயரமான மலைப்பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, பனிச்சரிவில் சிக்கி 7 வீரர்கள் மாயமாகினர். கடந்த 8ம் தேதி 14,500 அடி உயர பகுதியில் 7 பேரின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டன. இதில் பலியான வீரர்களின் உடல்கள் அசாம் மாநிலம், சோனித்பூர் மாவட்டம், டெஸ்பூர் விமான படை தளத்துக்கு நேற்று கொண்டு வரப்பட்டது. லெப். ஜெனரல் ரவீன் கோஸ்லா, வீரர்கள் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு, விமான படை விமானம் மூலம் வீரர்களின் உடல்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்று ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்….

Related posts

2 கட்ட தேர்தல் முடிந்த நிலையில் ஜம்மு – காஷ்மீரில் நாளை இறுதிகட்ட வாக்குப்பதிவு: 40 பதவிக்கு 415 வேட்பாளர்கள் போட்டி

3 மருத்துவர்கள், 3 செவிலியர்கள் மீது தாக்குதல்; டாக்டர்கள் மீண்டும் தீப்பந்தம் ஏந்தி பேரணி: கொல்கத்தாவில் பதற்றம்

சித்தராமையா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு