பனிக்கால டிப்ஸ்

பனிக்காலம் வந்தாலே சருமம் வறண்டுவிடும். உதடுகளில் தோல் உரியும். பாதங்களில் வெடிப்பு வரும். சருமம் சொரசொரப்பாகிவிடும். இதிலிருந்து பாதுகாக்க சில டிப்ஸ்… * குளிப்பதற்கு முன்பு, தேங்காய் எண்ணெயை உடல் முழுக்க தடவி 10 நிமிடம் கழித்து குளியுங்கள். இதிலுள்ள ஆன்டி ஆக்சிடன்ட், சருமத்தில் ஏற்படும் பாக்டீரியல் இன்ஃபெக் ஷன்களை தடுக்கும். * மிதமான வெந்நீரில் கால் டீஸ்பூன் மஞ்சள் பொடி, அரை டீஸ்பூன் காயவைத்த வேப்பிலைப் பொடி போட்டு நன்றாகக் கலக்கவும். அந்தத் தண்ணீரில் குளித்தால், சருமம் வழுவழுப்பாக இருப்பதுடன் இன்ஃபெக் ஷனும் நெருங்காது. * வேப்பிலை 20 கிராம், அதிமதுரம் 10 கிராம், கிச்சிலிக்கிழங்கு 20 கிராம், காயவைத்த ரோஜாபவுடர் 20 கிராம், நெல்லிப்பொடி 20 கிராம், லோதீராப்பட்டை 10 கிராம் ஆகியவற்றைப் பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். முகத்தில் தேங்காய் எண்ணெய் தடவி பிறகு இந்த பொடியை தண்ணீரில் கலந்து பூசவும். 10 நிமிடங்கள் கழித்து கழுவவும். வாரம் இருமுறை இப்படிச் செய்துவந்தால், சருமம் பளபளப்பாக இருக்கும். * உதடுகளில் வெடிப்பு ஏற்பட்டால், பாலாடை, வெண்ணெய், தேங்காய் எண்ணெய் இவற்றில் ஏதாவது ஒன்றை, இரவு படுப்பதற்கு முன்பு தடவுங்கள். * பாத்திரம் தேய்த்து முடித்ததும் கைகளில் தேங்காய் எண்ணெயைத் தேய்த்தால், கைகள் பட்டுபோல இருக்கும்.* கடலைமாவை பேஸ்ட்டாக்கி முகத்தில் தடவி, 10 நிமிடங்கள் கழித்து கழுவினால் சருமம் இறுக்கமாகும்….

Related posts

படித்து கொண்டே ஆட்டோ ஓட்டலாம்!

பாதங்களை பாதுகாக்க சில யோசனைகள்…

பெண்களுக்காக பெண்களால் இயக்கப்படும் பயணக் குழு!