பந்தலூர் நத்தத்தில் கால்வாய் அமைக்கும் பணியை விரைவுப்படுத்த கோரிக்கை

 

பந்தலூர், ஆக.19 : பந்தலூர் நத்தம் பகுதியில் நடைபாதை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை தாமதம் ஏற்படுத்தாமல் விரைவாக செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். நீலகிரி மாவட்டம், பந்தலூர் நத்தம் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு செல்லும் நடைபாதையில், குடியிருப்பில் இருந்து வரும் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நடைபாதையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. கழிவுநீர் கால்வாய் அமைத்து நடைபாதையை சீரமைக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து, நெல்லியாளம் நகராட்சி சார்பில் நிதி ஒதுக்கீடு செய்து டெண்டர் விடப்பட்டு நடைபாதை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்கு பணிகள் துவங்கப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன் துவக்கப்பட்ட பணி நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் மக்கள் நடைபாதையை பயன்படுத்தமுடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே, நடைபாதை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியினை தாமதம் இல்லாமல் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் நெல்லியாளம் நகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை