பந்தலூர் இந்திரா நகரில் சேறும் சகதியுமான நடைபாதையால் பாதிப்பு

 

பந்தலூர், ஜூலை 5: பந்தலூர் அருகே இந்திரா நகரில் நடைபாதை மற்றும் தெருவிளக்குகள் வசதி இல்லாததால் மக்கள் பாதிப்படைந்தனர். நீலகிரி மாவட்டம் நெல்லியாளம் நகராட்சி பந்தலூர் பஜார் அருகில் இந்திராநகர் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நடைபாதை மற்றும் தெருவிளக்குகள் அமைத்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக நெல்லியாளம் நகராட்சியை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக மாறும் நடைபாதையில் மக்கள் நடந்து செல்லமுடியாமல் சிரமப்படுகின்றனர். இறந்தவர்களை மயானத்திற்கு அடக்கம் செய்வதற்கு கொண்டு செல்லவும், நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்கும், கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் நடந்து செல்வதற்கும் முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே நகராட்சி நிர்வாகம் அப்பகுதிக்கு நடைபாதை வசதி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்திள்ளனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை