பந்தலூர் அரசு மருத்துவமனையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

 

பந்தலூர், அக்.25: பந்தலூர் அரசு மருத்துவமனை வட்டார சுகாதார நிலையமாக செயல்பட்டு வந்த நிலையில் கடந்த 1998 முதல் தரம் உயர்த்தப்பட்டு அரசு மருத்துவமனையாக செய்யப்பட்டு வருகிறது. அப்போது, நோயாளிகளின் நலன் கருதி கூடுதல் கட்டிடம் தேவை என்பதால் மருத்துவமனையில்கடந்த 20 ஆண்டுக்கு முன் 80 படுக்கை வசதிகளுடன் உள் நோயாளிகள் பிரிவு மற்றும் 40 படுக்கை வசதிகளுடன் அறுவை சிகிச்சை அரங்கு கட்டிடம் கட்டப்பட்டது.இந்த கட்டிடம் கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

இதில், தற்போது 4 மருத்துவர்கள் பணியில் உள்ளனர். இதனால், தினமும் 100க்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தினமும் 20க்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தற்போது அறுவை சிகிச்சை அரங்கில் அமைக்கப்பட்ட உபகரணங்கள் பயனின்றி பழுதடைந்து உள்ளது. அறுவை சிகிச்சை அரங்கில் உள்ள பழமையான இயந்திரங்களை மாற்றி புதிய இயந்திரங்கள் வழங்கி மீண்டும் பந்தலூர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அரங்கினை செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

உள்நோயாளிகள் பிரிவு அமைந்துள்ள கட்டிடத்தின் பின்பக்கம் கழிவறை பகுதியில் நீர் கசிவு ஏற்பட்டு உரிய பராமரிப்பு இன்றி காணப்படுவதால் கழிப்பிடம் சுவர் உடைந்து காணப்படுகிறது. இதனால், கட்டிடத்தின் உறுதி தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, பந்தலூர் அரசு மருத்துவமனை கட்டிடம் கழிப்பறையை உடைத்து விட்டு புதிய கழிப்பறை கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு