பந்தலூரில் கனமழைக்கு வீடு இடிந்து சேதம்

பந்தலூர், ஜூன் 26: நீலகிரி மாவட்டம் பந்தலூர் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பந்தலூரில் நேற்று முன்தினம் 32 மிமீ மழையும், சேரம்பாடியில் 28 மிமீ, தேவாலாவில் 61 மிமீ மழையும் பதிவாகியுள்ளது. மேகமூட்டத்துடன் கூடிய மழை பெய்து வருவதால் பந்தலூர் அருகே உப்பட்டி பெருங்கரை பகுதியில் வசித்து வரும் கூலித்தொழிலாளி ஞானசேகரன் என்பவரது வீட்டின் ஒருப்பகுதி சுவர் இடிந்து விழுந்து சேதமானது. சம்பவ இடத்திற்கு விஏஓ அசோக்குமார் மற்றும் வருவாய் துறையினர் சென்று சேதம் குறித்து ஆய்வு செய்தனர். பாதிக்கப்பட்டவருக்கு அரசு சார்பில் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

அத்திக்குன்னா செட்டிவயல் பகுதியில் காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் அப்பகுதியில் வாழை விவசாயம் செய்துள்ள விவசாயி தயானந்தன் என்பவருடைய அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 1500 வாழைகள் சாய்து சேதமாகி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழையால் சேதமடைந்த வாழைக்கு அரசு சார்பில் இழப்பீடு வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

கடலில் தவறி விழுந்து மீனவர் பலி

கருத்தப்பாலம் பகுதியில் சீரமைப்பு பணி

தூத்துக்குடியில் ஜூலை6ம் தேதி வரை நீதிமன்ற புறக்கணிப்பு