பந்தனேந்தல் தடுப்பணையில் இருந்து திருச்சுழி கண்மாய்க்கு தண்ணீர் திறக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

திருச்சுழி: பந்தனேந்தல் தடுப்பணையில் இருந்து திருச்சுழி கண்மாய்க்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள் ளனர்.திருச்சுழி பெரிய கண்மாய் சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் ஐந்து மடைகள் கொண்டு அமைந்துள்ளது. இந்த கண்மாய் உரிய முறையில் தூர்வாரி பராமரிக்கப்படாததால் திருச்சுழி, பச்சேரி, தமிழ்பாடி ஆகிய மூன்று கிராம விவசாயிகள், சுமார் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை தரிசு நிலங்களாக போட்டு வந்தனர். இந்த மூன்று கிராமங்களை சேர்ந்த ஏராளமான விவசாய குடும்பத்தினர் இந்த கண்மாயை நம்பி இருந்த நிலையில் பல வருடங்களாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததன் பேரில், கடந்த மூன்று வருடத்திற்கு முன்பாக சுமார் 10 கோடியே 46 லட்சம் ரூபாய் செலவில் தடுப்பணை கட்ட பூமி பூஜை போடப்பட்டு பணிகள் முடிவடைந்தது. தற்போது திருமங்கலம் பகுதியில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து குண்டாற்றில் நீர் வர தொடங்கியுள்ளது. தற்போது புதியதாக கட்டப்பட்ட பந்தனேந்தல் தடுப்பணை நிரம்பி குண்டாற்றில் தண்ணீர் வீணாக செல்கிறது. எனவே தடுப்பணையிலிருந்து திருச்சுழி கண்மாய்க்கு தண்ணீரை திருப்பி விட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து தமிழ்பாடி விவசாயிகள் கூறுகையில், பந்தனேந்தல் பகுதியில் தடுப்பணை கட்ட பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்த பின்னர் தடுப்பணை கட்டும் பணி நடைபெற்றது. கடந்த வருடம் பணிகள் ஓரளவிற்கு முடியும் தருவாயில் திருச்சுழி கண்மாய்க்கு தண்ணீர் திறந்து விட கோரிக்கை விடுத்தும் திறக்கவில்லை. இதனால் கண்மாயிக்கு நீர் வரத்தின்றி வேகமாக வற்றியது. தற்போது மழை பெய்து பந்தனேந்தல் தடுப்பணை நிரம்பி குண்டாற்றில் தண்ணீர் வீணாக செல்கிறது. இந்நீரை திருச்சுழி கண்மாய்க்கு திருப்பிவிட வேண்டும் என வலியுறுத்தினர்.  …

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்