பத்திர பதிவு அதிகாரிகள் மாற்றம்

 

கோவை, மார்ச் 15: கோவை மண்டல பத்திர பதிவுத்துறையில் துணை பதிவு தலைவராக (டிஐஜி) ஆக பணியாற்றிய சுதா மல்யா சென்னைக்கு மாற்றப்பட்டார். இவருக்கு பதிலாக பிரபாகர் டிஐஜி ஆக நியமிக்கப்பட்டார். இதேபோல் கோவை தெற்கு பகுதி உதவி பதிவுத்துறை தலைவர் (ஏஐஜி) சிவராஜ் மாற்றப்பட்டார்.

இவருக்கு பதிலாக ராஜா என்பவர் நியமனம் செய்யப்பட்டார். பதிவுத்துறையில் பதிவு பணிகளை வேகமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பதிவு பணிகளில் தாமதம் செய்யக்கூடாது. பத்திரங்களை ேதவையின்றி நிராகரிக்க கூடாது. வாரந்தோறும் திங்கள் கிழமை குறை தீர்ப்பு கூட்டம் நடத்த குறைகளை கேட்க வேண்டும். கடந்த காலங்களில் டிஐஜி அலுவலகத்தில் குறை கேட்பு கூட்டம் சரியாக நடத்தப்படாமல் இருந்தது.

மக்களை சந்தித்து மனுக்களை பெறாமல் இருந்ததால் புகார்கள் அதிகமானது. இனி இதுபோன்ற நிலைமை இருக்காது. கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டத்தில் 56 சார் பதிவாளர் அலுவலகங்களில் கடந்த காலங்களை விட அதிகளவு பத்திரங்கள் பதிவு செய்து வருவாய் அதிகரிக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் 3500 கோடி ரூபாய்க்கு அதிகமாக வருவாய் பெறப்படும் என பதிவுத்துறையினர் தெரிவித்தனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு