பத்திரப்பதிவு அலுவலகம் கட்டி தருவேன்: கே.பி.சங்கர் உறுதி

திருவொற்றியூர்: திருவொற்றியூர் தொகுதி திமுக வேட்பாளர் கே.பி.சங்கர் நேற்று எர்ணாவூர் பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது அந்த பகுதி இளைஞர்களிடம் சிறிது நேரம் கேரம்போர்டு விளையாடினார். பின்னர் அவர் பேசியதாவது, “நான் திருவொற்றியூர் கே.வி.கே.குப்பத்தில் பிறந்து வளர்ந்து இன்றளவும் அதே இடத்தில் குடும்பத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அதனால் இந்த தொகுதியில் உள்ள மக்களின் தேவை, அடிப்படை வசதி பிரச்னைகளை நன்கு அறிவேன். பல ஆண்டுகளாக நலிவுற்றவர்களுக்கு பல்வேறு உதவிகளை எனது சொந்த செலவில் செய்தவன் நான் என்பது உங்களுக்கு தெரியும். இட நெருக்கடியில் உள்ள காலடிப்பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்திற்கு பதிலாக அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய சார் பதிவாளர் பத்திரப்பதிவு அலுவலகம் கட்டப்படும். பழுதடைந்த கட்டிடத்தில் இயங்கி வரும் தாசில்தார் அலுவலகத்திற்கு பதிலாக புதிய அலுவலகம் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திருவொற்றியூரில் கிரிக்கெட், கால்பந்து, கேரம்போர்டு, கபடி போன்ற பல்வேறு விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க அந்தந்த விளையாட்டு வீரர்கள் அடங்கிய குழுவை அமைத்து தமிழகத்திலேயே விளையாட்டு போட்டிகளில் திருவொற்றியூர் தொகுதி முன்மாதிரியான தொகுதியாக மாற்றுவேன்,” என்றார்….

Related posts

டெல்லியில் பிரதமர் மோடி உடன் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

ராஜஸ்தான் மாநில வேளாண்மை, தோட்டக்கலை, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரோடி லால் மீனா திடீர் ராஜினாமா

மக்கள் பணி, கட்சிப் பணியை தொய்வின்றி தொடர்வோம்: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்