பத்திரப்பதிவுத்துறையில் ரூ.12,003 கோடி வருவாய்: அமைச்சர் பாராட்டு

சென்னை: பத்திரப்பதிவுத்துறையில் ரூ.12,003 கோடி வருவாய் எட்டியதற்கு அமைச்சர் மூர்த்தி ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் அனைத்து துணைப் பதிவுத்துறை தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் கொண்ட ஜனவரி மாத பணி சீராய்வு கூட்டம் சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்தில், துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி, ஐஜி சிவன் அருள் மற்றும் கூடுதல் பதிவுத்துறை தலைவர்கள், பதிவுத்துறை தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) மற்றும் அனைத்து துணை பதிவுத்துறை தலைவர்கள், மாவட்ட பதிவாளர்கள் (நிர்வாகம்) மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் (முத்திரை) மற்றும் தனித்துணை ஆட்சியர் (முத்திரை) ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் ரூ.12 ஆயிரம் கோடி வருவாயை பதிவுத்துறை கடந்துள்ளதற்கு அமைச்சர் மூர்த்தி பாராட்டு தெரிவித்தார். ஜனவரி 2022 மாதத்தில் வருவாய் ரூ.931.03 கோடி ஈட்டப்பட்டுள்ளது. இது சென்ற நிதியாண்டில் ஜனவரி 2021 மாத வருவாயை காட்டிலும் ரூ.34.32 கோடி அதிகமாகும். 2021-22 நிதியாண்டில் ஜனவரி 2022 முடிய வருவாய் ரூ.10785.44 கோடி ஈட்டப்பட்டுள்ளது. பிப்ரவரி 2022 மாதத்தில் 25.2.2022 முடிய வருவாய் ரூ.1217 கோடி என்ற நிலையில் 25.2.2022 அன்று வரை ரூ.12,003 கோடி வருவாயாக பதிவுத்துறையில் ஈட்டப்பட்டுள்ளது. அனைத்து துணைப் பதிவுத்துறை தலைவர்கள் மற்றும் மாவட்ட பதிவாளர்கள் (நிர்வாகம்) ஆகியோர் பதிவுத்துறைக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை எவ்வித கசிவுமின்றி வசூலிக்க முழு கவனம் செலுத்த வேண்டும் என்று அமைச்சர் மூர்த்தி உத்தரவிட்டுள்ளார். …

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை