பத்திரகாசி, தீர்த்தம் கிணறு பயன்பாட்டிற்கு திறப்பு

ஓசூர்: ஓசூர் தேர் பேட்டை பகுதியில் மலை மீது அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மரகதாம்பிகை சந்திர சூடேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் பல நூறு ஆண்டுகளாக, ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் தேர்த்திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுகிறது. இந்த கோயில், இப்பகுதி மக்களின் பலருடைய குலதெய்வமாக உள்ளது. இந்த கோயிலுக்கு வருபவர்கள், இங்குள்ள பச்சை குளத்தில் நோய் தீர வேண்டி நீராடுவது, குளத்தில் உப்பு கொட்டுவது, நவதானியங்களை குளத்தில் கொட்டுவது போன்றவற்றில் ஈடுபடுகின்றனர். தற்போது குளத்தில் உள்ள நீர் மாசடைந்துள்ளது. தண்ணீர் கெட்டு போனதால், பொதுமக்கள் பயன்பாட்டிற்கும், பக்தர்கள் வசதிக்கும் தேர் பேட்டையை சேர்ந்த, ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன், பத்திரகாசி, தீர்த்த கிணறு என 2 கிணறுகள் அமைத்து, அதை பயன்பாட்டிற்காக பூஜை செய்து திறக்கப்பட்டுள்ளது.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை