பதுக்கி வைத்திருந்த 1,650 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

மதுரை, ஜன.28: மதுரை சிந்தாமணி பகுதியில் உணவு கடத்தல் தடுப்பு போலீசார் நடத்திய சோதனையில் 1,650 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. தப்பிச் சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர். தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்கள் பதுக்கப்படுவதை கண்காணிக்கும் பொருட்டு, சென்னை உணவு கடத்தல் பிரிவு தலைவர் நிர்மல் குமார் ஜோஷி உத்தரவுப்படி, மதுரை மண்டல உணவுப்பொருள் தடுப்பு காவல் கண்காணிப்பாளர் விஜய கார்த்திக் ராஜ், மதுரை சரக டி.எஸ்.பி., ஜெகதீசன் மேற்பார்வையில் மதுரை உணவு கடத்தல் பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் தலைமையில் நேற்று திடீர் சோதனை நடத்தப்பட்டது.

சிந்தாமணி ராஜமான் நகர் கண்மாய்கரை பகுதியில் உள்ள கட்டிடத்தில் சோதனை செய்தபோது, 1,650 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ரேசன் அரிசியை பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அரிசி கடத்தி தலைமறைவான மதுரையைச் சேர்ந்த விஷ்வாவை போலீசார் தேடி வருகின்றனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்