பதிவு கட்டணம் செலுத்தி எம்பிபிஎஸ் 2வது சுற்று கலந்தாய்வுக்கு பாட விருப்பத்தை சமர்ப்பிக்கலாம்

காரைக்கால், செப்.29: எம்பிபிஎஸ் 2வது சுற்று கலந்தாய்வுக்கு பாட விருப்பத்தை சமர்ப்பிக்கலாம் என்று சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன் சர்மா தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து புதுச்சேரி சென்டாக் கூடுதல் ஒருங்கிணைப்பாளர் அமன் சர்மா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஏ எம்எஸ் படிப்புகளுக்கான 2வது சுற்று கலந்தாய்வுக்கு வரும் 30ம் தேதி மாலை 5 மணி வரை பாட விருப்பங்களை சமர்ப்பிக்கலாம். சென்டாக்கில் பதிவு செய்யப்பட்ட அனைத்து மாணவர்கள் மற்றும் முதல் சுற்றில் சீட் ஒதுக்கப்பட்டவர்கள் உட்பட அனைவரும் 2வது சுற்று கலந்தாய்வில் பங்கேற்க தகுதியுடைவர்கள்.

இதில் எம்பிபிஎஸ் படிப்புக்கு மட்டும் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும். அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு பொது.,ஓபிசி, எம்பிசி, ஈடபிள்யூ இபிசி, பிசிஎம், பிடி எஸ், பிரிவினர் ரூ.10 ஆயிரமும்.எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் ரூ.5 ஆயிரமும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு அனைத்து பிரிவினரும் ரூ.2 லட்சமும் பதிவு கட்டணமாக சென்டாக் கணக்கில் செலுத்த வேண்டும்.

பதிவு கட்டணம் செலுத்தியவர்கள் மட்டுமே 2வது சுற்று கலந்தாய்வுக்கு பரிசீலிக்கப்படுவார்கள். முதல் சுற்று கலந்தாய்வில் சீட் பெற்றவர்கள், 2வது சுற்று கலந்தாய்வுக்கு பதிவு கட்டணம் செலுத்தாமல் பங்கேற்கலாம். 2வது சுற்று கலந்தாய்வில் சீட் ஒதுக்கப்பட்டவர்களுக்கு பதிவு கட்டணம் திருப்பி தரப்படும். சீட் ஒதுக்கப்பட்டு கல்லூரியில் சேராத மாணவர்களிடமிருந்து பதிவு கட்டணம் பறிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு சென்டாக் இணையதளத்தில் பார்க்கவும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு