பதவி உயர்வு, பணி மாறுதலுக்கு லஞ்சம் பெற்ற விவகாரம் போக்குவரத்து துணை ஆணையரின் உதவியாளரிடம் ரூ.1.79 லட்சம் பறிமுதல்: கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை

சென்னை: பதவி உயர்வு, பணி மாறுதலுக்கு லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாக போக்குவரத்து துணை ஆணையரின் உதவியாளரிடம் இருந்து ₹1.79 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னை, சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் பொதுப்பணித்துறை அலுவலகம்,  பிற்படுத்தப்பட்டோர் நலவாரியம், ஆதிதிராவிடர் நலவாரியம், பசுமை  தீர்ப்பாயம், குடிசை மாற்று வாரிய அலுவலகம், மகளிர் ஆணையம், ஆறுமுகசாமி  விசாரணை ஆணையம், வேளாண்மை துறை ஆணையர் அலுவலகம் மற்றும் துணை போக்குவரத்து  ஆணையர் அலுவலகம் உள்பட 10க்கும் மேற்பட்ட அலுவலகங்கள் அமைந்துள்ளன. இந்நிலையில் சென்னை மாவட்டம், துணை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் ஆணையர் நடராஜன்  தன்னுடைய அலுவலகத்தில் பணிபுரியும் 30 உதவியாளர்களிடமிருந்து  கண்காணிப்பாளர் பதவி உயர்வுக்காக தலா ₹5 லட்சம் வீதம் லஞ்சம் பெறுவதாக  லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, நேற்று சென்னை நகர சிறப்பு பிரிவு-3, ஊழல் தடுப்பு  கண்காணிப்புத்துறை அதிகாரிகள் மற்றும் துணை ஆய்வுக்குழு அலுவலர்களுடன்  இணைந்து சென்னை எழிலகத்தில் உள்ள துணை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில்  திடீர் என சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத ₹35 லட்சம் மற்றும் வீட்டில் நடத்திய சோதனையில் ₹2 லட்சம் பணத்தை கைப்பற்றினர். இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்  வழக்குபதிவு செய்து பணம் எங்கிருந்து வந்தது, ஒவ்வொரு ஊழியரிடம் எவ்வளவு  வாங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே லஞ்சமாக பணம் வாங்கிக் கொண்டு பணி நியமனம் ஏதும் செய்யப்பட்டுள்ளதா, இதுபோன்று பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதா  என்று விசாரணை நடத்தியதில் நடராஜன் உதவியாளர் முருகன் மூலம் போக்குவரத்து துறையில் பணிமாறுதலுக்கு முருகன் மூலம் லஞ்சமாக வாங்கியது தெரியவந்தது. அதை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாதேவி தலைமையில் போலீசார், நடராஜன் உதவியாளர் முருகன் தங்கியுள்ள சேப்பாக்கம், சி.என்.கிருஷ்ணசாமி சாலையில் உள்ள லாட்ஜில் 153வது அறையில் சோதனை நடத்தினர்.இதில் கணக்கில் வராத ₹1.79 லட்சம் ரொக்கம் மற்றும் பதவி உயர்வு மற்றும் பணி மாறுதலுக்கு பணம் கொடுத்த அதிகாரிகளின் பட்டிwயல் சிக்கியது. இதையடுத்து லாட்ஜில் சிக்கிய பணம் குறித்தும், ஆவணங்கள் குறித்தும் முருகனிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்….

Related posts

காங்கேயம் அருகே அறநிலைய ஊழியருக்கு கத்திக்குத்து: தலைமறைவானவருக்கு போலீஸ் வலைவீச்சு

லஞ்சம் வாங்கிய பண்ருட்டி நகராட்சி உதவியாளர் கைது

மதுரை மேலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 55 சவரன் நகை கொள்ளை..!!