பண்ருட்டி அருகே தவறான சிகிச்சையால் 4 வயது சிறுமி சாவு

பண்ருட்டி, ஜூன் 16: பண்ருட்டி அருகே தெற்கு மேல் மாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகள் பானு (4). இவருக்கு கடந்த 13ம் தேதியன்று காய்ச்சல் ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற தந்தை பாஸ்கர் குழந்தையை காடாம்புலியூரில் உள்ள தனியார் கிளினிக்கிடம் அழைத்து சென்றார். அங்கு மருத்துவர் பரிசோதித்து விட்டு ஊசி போட்டுள்ளார். இதன் பின்னர் வீட்டுக்கு வந்ததும், பானுஸ்ரீக்கு சரியான முறையில் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் கை, கால்களில் புண்கள் ஏற்பட்டது. இதையடுத்து பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று காணப்பித்துள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர், அவள் ஏற்கனவே இறந்துவிட்டாள் என தெரிவித்துள்ளார். பின்னர் காடாம்புலியூர் போலீசார், சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி காடாம்புலியூர் காவல் நிலையம் முன்பு சாலை மறியல் அவர்களது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவ அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதன் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை