பண்ணைக்குட்டையில் மீன் வளர்ப்பு செயல் விளக்கம்

சிவகங்கை, அக்.31: சிவகங்கை அருகே மானாகுடி கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் மீன்வளத்துறை சார்பாக பண்ணைக் குட்டையில் மீன் வளர்ப்பு செயல் விளக்கம் மீன் வள உதவி இயக்குநர் செளந்தரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. மானாகுடியில் பண்ணைக் குட்டை அமைத்துள்ள விவசாயி ஜெகதீசனின் பண்ணைக் குட்டையில் மீன் குஞ்சுகள் விடப்பட்டது.

மேலும் அதற்கு தேவையான உணவுகள், மருந்துகள் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து அதனைப் பயன்படுத்தும் முறைகள் பற்றியும் தொழில்நுட்ப கருத்து வழங்கினார். இந்த செயல் விளக்கத்தினை மீன்வளத்துறை அலுவலர்கள்,அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் ராஜா ஏற்பாடு செய்தனர். விவசாயிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை