பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு

திருப்பூர், மார்ச் 31: தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் சங்கத்தின் சார்பில், திருப்பூர் மாவட்டத்தில் 2023-2024 கல்வி ஆண்டில் பணி நிறைவு பெறக்கூடிய ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நஞ்சப்பா நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. மாநில தலைவர் வரதன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜாக்டோ-ஜியோ நேரு சிறப்புரையாற்றினார். விஸ்வநாதன், செங்கோட்டுவேல், அரியநாயகம், மு.கந்தசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களான பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தனலட்சுமி, பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வசந்தி, காங்கயம் அரசு மேல்நிலைப்பள்ளி கிருஷ்ணமாரி, தாராபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி குழந்தைவேலு ஆகியோருக்கு மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் சார்பாக பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள். இதற்கான ஏற்பாடுகளை திருப்பூர் மாவட்ட தலைவர் சிவராஜன் செய்திருந்தார்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு