பணியின் போது உயிரிழந்த 32 காவலர்கள் குடும்பத்திற்கு தலா 3 லட்சம்

சென்னை: தமிழக காவல் துறையில்  கடந்த 2019-20  மற்றும் 2012ம் ஆண்டு சென்னை மாநகர காவல் துறையில் பணியின் போது உடல் நலக்குறைவு மற்றும் சாலை விபத்துகளில் சென்னை ஆயுதப்படை மற்றும் சிறப்பு பிரிவில் பணியாற்றிய 8 காவலர்கள், மாநகர வடக்கு மண்டலத்தில் 2 பேர், கிழக்கு மண்டலத்தில் 8 பேர், தெற்கு மண்டலத்தில் 5 பேர், மேற்கு மண்டலத்தில் 3 பேர், போக்குவரத்து பிரிவில் 6 என மொத்தம் 32 காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் உயிரிழந்தனர். முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 3 லட்சத்திற்கான காசோலைகளை உயிரிழந்த 32 காவலர்களின் குடும்பத்தாரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேற்று அழைத்து போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் வழங்கினார். நிகழ்ச்சியின் போது தலைமையிட கூடுதல் கமிஷனர் லோகநாதன், இணை கமிஷனர் சாமுண்டீஸ்வரி ஆகியோர் உடனிருந்தனர்….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்