பணியாளர் குடியிருப்பில் சிறுவர் பூங்கா திறப்பு காரைக்குறிச்சியில் சூரிய பகவான் வழிபட்ட தலமான பசுபதீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம்

தா.பழூர்: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி கிராமத்தில் சூரிய பகவான் சிவனை வழிபட்ட தலமாக விளங்கும் சவுந்தரநாயகி உடனுறை பசுபதீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று நான்கு ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில் நன்னீராட்டு நிறைவு விழா மற்றும் திருக்கல்யாணம், சுவாமி அம்பாள் வீதியுலா நடைபெற்றது. காலை வேள்வி மற்றும் சாமி ,அம்பாள் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் திருக்கல்யாணம் செய்ய பொதுமக்கள் சீர் வரிசைகள் எடுத்து வந்து சுவாமி முறைப்படி திருக்கல்யாணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் காரைக்குறிச்சி சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி அம்பாள் திருக்கல்யாணத்தை கண்டு வழிபாடு செய்தனர். பின்னர் மாலை வேளையில் கைலாய வாத்தியம் முழங்க சுவாமி அம்பாள் திருவீதி உலா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம நாட்டாமைகள், கிராம சான்றோர்கள், பக்தர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை