பணமோசடி வழக்கில் கோவை தொழிலதிபர் விமான நிலையத்தில் கைது

சென்னை: கோவையை சேர்ந்தவர் பெரோஸ்கான் (41), தொழிலதிபர். இவர், பெங்களூருவை சேர்ந்த ஒரு தொழிலதிபரிடம் தொழில்ரீதியாக பரிவர்த்தனை செய்யும்போது, பெருமளவு பணம் மோசடி செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெங்களூருவில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் பெங்களூரு தொழிலதிபர் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெரோஸ்கானை தேடினர். ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டார். அவரை பிடிக்க  அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் எல்ஓசி நோட்டீஸ் அனுப்பி வைத்திருந்தனர். இதற்கிடையே, துபாயில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று முன்தினம் இரவு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. இந்நிலையில் ஓராண்டாக தலைமறைவாக இருந்த பெரோஸ்கான், அந்த விமானத்தில் வந்தது தெரியவந்தது. அவரை குடியுரிமை அதிகாரிகள் பிடித்து ஒரு அறையில் வைத்தனர். பின்னர், பெங்களூரு மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் பெரோஸ்கானை அழைத்து செல்ல சென்னை வருகின்றனர்….

Related posts

63 வயது மனைவியை குத்தி கொன்ற 72 வயது கணவர்

12 டூவீலர்களை திருடிய ‘கோடீஸ்வரர்’ கைது: பல கோடி சொத்துக்கு அதிபதி

தாயுடன் கள்ளத்தொடர்பு; விவசாயி கொன்று வீச்சு: வாலிபர் கைது