பட்டுக்கூடு வரத்து சரிந்தது

 

தர்மபுரி, மே 29: தர்மபுரி அங்காடிக்கு பட்டுக்கூடு வரத்து சரிந்துள்ளது. தர்மபுரி நான்கு ரோடு அருகே அரசு பட்டுக்கூடு ஏல அங்காடி செயல்பட்டு வருகிறது. இந்த அங்காடிக்கு தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு, மாரண்டஹள்ளி பகுதிகளில் இருந்தும், ஈரோடு சித்தோடு, சத்தியமங்கலம், கரூர், திருவண்ணாமலை பகுதிகளில் இருந்தும் தினமும் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் பட்டுக்கூடுகளை கொண்டு வந்து ஏலத்தில் பங்கேற்கின்றனர்.

தர்மபுரி ஏலங்காடியில் தாங்கள் கொண்டுவரும் பட்டுக்கூடுகளுக்கு அதிகபட்ச விலை கிடைப்பதால் ஏராளமான விவசாயிகள் வந்து ஏலத்தில் கலந்து கொள்கின்றனர். இந்த விவசாயிகளுக்கு ஆன்லைன் மூலம் பணப்பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று 2 விவசாயிகள் 34 கிலோ வெண் பட்டுக்கூடுகளை கொண்டு வந்திருந்தனர். இந்தப்பட்டுக்கூடுகள் ₹14 ஆயிரத்து 872க்கு ஏலம் போனது. இவை, அதிகபட்சமாக ₹446க்கும், குறைந்தபட்சமாக ₹410க்கும், சராசரியாக ₹436க்கும் ஏலம் போனது.

 

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை