பட்டிவீரன்பட்டி பகுதியில் குடிநீர் கோரி மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி

பட்டிவீரன்பட்டி, ஆக. 31: பட்டிவீரன்பட்டி பகுதியில் ேபாதிய மழையின்றி வாடி வந்த மானாவாரி பயிர்களை மழை பெய்து காப்பாற்றியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள சிங்காரக்கோட்டை, ஒட்டுப்பட்டி, அய்யம்பாளையம், சித்தரேவு, நெல்லூர், அய்யம்பட்டி, ரெங்கராஜபுரம் பகுதிகள் மற்றும் தாண்டிக்குடி மலை அடிவார புனல்காடு பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நிலக்கடலை, தட்டாம்பயிறு மொச்சை, சோளம், பருத்தி போன்ற மானாவாரி பயிர்களை விவசாயிகள் நடவு செய்தனர்.

இந்த மானாவாரி விவசாயம் மழையை மட்டுமே நம்பி நடைபெறும் விவசாயமாகும். இந்நிலையில் கடந்த 25 நாட்களுக்கும் மேலாக போதிய மழையின்றி வெயில் வாட்டி வதைத்து. மேலும் கடுமையான வெப்பம் காரணமாக நிலத்தில் இருந்த ஈரப்பதம் முற்றிலும் குறைந்தது. இதனால் மானாவாரி பயிர்கள் கருக துவங்கியது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை முதல் வெயில் அடித்து வந்த நிலையில் மதியில் சுமார் 3 மணியளவில் 2 மணிநேரத்திற்கு மேலாக இப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் மானாவாரி விவசாயம் செழிப்பானதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது, ‘வெயிலின் தாக்கத்தினால் நிலத்தில் ஈரப்பதம் பற்றி பயிர்கள் காய துவங்கியது. இந்த நேரத்தில் மானாவரி பயிர்களை மழை உயிர் கொடுத்து காப்பாற்றியுள்ளது. இந்த மழை தொடர்ந்து பெய்யும்பட்சத்தில் மானாவாரி விளைச்சல் அதிகரிக்க வாய்ப்புள்ளது’ என்றனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை