பட்டியலின மாணவர்களுக்கு தின்பண்டம் தர மறுத்த விவகாரம்: விஏஓ மாற்றம்

சங்கரன்கோவில்: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பாஞ்சாகுளத்தில் பட்டியல் இனத்தை சேர்ந்த மாணவர்களுக்கு ஊர் கட்டுபாடு எனக்கூறி பெட்டி கடையில் தின்பண்டம் கொடுக்க மறுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து கலெக்டர் ஆகாஷ் உத்தரவின் பேரில் அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது. கடை உரிமையாளர் மகேஷ்வரன் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர். இதை பாஞ்சாகுளம் ஊருக்குள் வரும் வாகனங்கள் மற்றும் புதிய நபர்களை விசாரணைக்கு பிறகே போலீசார் அனுமதிக்கின்றனர். பாஞ்சாகுளத்தில் கிராம நிர்வாக அதிகாரி பொறுப்பை, தெற்கு சங்கரன்கோவில் கிராம நிர்வாக அதிகாரி மல்லிகா கூடுதலாக கவனித்து வந்தார். பரபரப்பான சூழ்நிலை காரணமாக அவரிடமிருந்து பொறுப்பை மாற்றி மாரியப்பன் என்பவர் புதிய விஏஓவாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்….

Related posts

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

தி.மலையில் பக்தர்கள் அலைமோதல்; அண்ணாமலையார் கோயிலில் 3 மணிநேரம் காத்திருந்து தரிசனம்

நீர்வரத்து 17,000 கனஅடியாக அதிகரிப்பு; ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க தடை