பட்டாளம்மன் கோயிலில் பாலாலய பூஜை

காரிமங்கலம்: காரிமங்கலம் அடுத்த பெரியாம்பட்டி பஞ்சாயத்தில், பழமை வாய்ந்த பட்டாளம்மன் கோயில் உள்ளது. அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில், பராமரிப்பின்றி பாழடைந்து நிலையில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பங்களிப்புடன் கோவில் புனரமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையடுத்து பட்டாளம்மன் கோயிலில் பாலாலய பூஜை நேற்று நடந்தது. இதையொட்டி சிறப்பு ஹோமம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஊர் பிரமுகர் வடிவேல், முன்னாள் தலைவர் பாண்டுரங்கன், ஒன்றிய கவுன்சிலர் உதயகுமார், பஞ்சாயத்து முன்னாள் உதவி இயக்குனர் சென்னியப்பன், ஊர் கவுண்டர் முருகன், பெரிச்சி கவுண்டர், பிடிஏ தலைவர் மாதா செட்டி, பழனி செல்வம், ரகு, தங்கராஜ், சீனிவாசன், சுப்பிரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை 7 ஊர் கிராம ஊர் கவுண்டர்கள் மற்றும் ஊர் செட்டியார்கள் செய்துள்ளனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை