பட்டாசு கடைஅனுமதி வழங்க 20,000 லஞ்சம்; ஊராட்சி அலுவலர் கைது

சாத்தூ: விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே வெங்கடாசலபுரத்தைச் சேர்ந்தவர் திருமலைராஜன் (50). இவர், மேட்டமலை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பட்டாசுக்கடை அனுமதிக்கான வரைபடம் கேட்டு ஊராட்சி செயலாளர் கதிரேசனை (52) அணுகியுள்ளார். அதற்கு, அவர் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து அவர் விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகாரளித்துள்ளார். போலீசாரின் அறிவுரையின்படி,  திருமலைராஜன் ரசாயன பவுடர் பூசிய ரூ.20,000ஐ முன்பணமாக கதிரேசனிடம் நேற்று கொடுத்தார். அப்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் கதிரேசனை பிடித்து கைது செய்தனர். அதன்பின், விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேட்டமலை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்….

Related posts

வெளிநாடுகளுக்கு போலி தங்கம் அனுப்பி ரூ.1,000 கோடி மோசடி

ஆவினில் வேலை வாங்கித் தருவதாக ரூ.30 லட்சம் மோசடி: அதிமுக முன்னாள் சபாநாயகர் சகோதரர் கைது

தீரன் அதிகாரம் பட பாணியில், ஹரியானா சென்று கொள்ளையனை துப்பாக்கி முனையில் கைது செய்த தமிழக போலீஸ்!!