பட்டாக்கத்தியுடன் சுற்றிய வாலிபர் கைது

புழல்: சோழவரம் போலீசார் நேற்று மதியம் காரனோடை, சோழவரம் ஆகிய பகுதிகளில் உள்ள மார்க்கெட் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது,  சோழவரம் மார்க்கெட்டில் சந்தேகம்படும்படி ஒரு வாலிபர் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து சோதனை செய்தபோது, முதுகு பகுதியில் பட்டாக்கத்தி வைத்திருப்பது தெரிந்தது. அதை பறிமுதல் செய்து, அவரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். அதில் சென்னை எர்ணாவூர் 21வது பிளாக்கை சேர்ந்த  ராகேஷ் (22) என தெரிந்தது. தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர் எதற்காக பட்டாக்கத்தியுடன் சுற்றி வந்தார் என தீவிரமாக விசாரிக்கின்றனர்.கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த பல்லவாடா கிராமத்தில் ஊருக்கு ஒதுக்கு புறமாக டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு சூபர்வைசராக கண்ணம்பாக்கத்தை சேர்ந்த ராமநாதன் (42), ஊழியர்கள் 3 பேர் பணியாற்றுகின்றனர். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும், அனைவரும் வீட்டுக்கு சென்றனர். நேற்று காலை வழக்கம்போல் கடையை திறக்க வந்தனர். அப்போது, கடை ஷட்டரின் மையப்பகுதி உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து பாதிரிவேடு போலீசார் மற்றும் டாஸ்மாக் மேற்பார்வையாளர் ராமநாதன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்றனர். விசாரணையில், ஷட்டரை உடைத்த மர்மநபர்கள், உள்ளே செல்ல வழி இல்லாததால், அப்படியே விட்டு சென்றனர். இதனால், சுமார் ரூ.15 லட்சம் மது பாட்டில்கள் தப்பியது என தெரிந்தது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.பள்ளிப்பட்டு: திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டை அடுத்த வங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் மன்னப்பன் (50). நெசவு தொழிலாளி. நேற்று அதிகாலை மன்னப்பன், கிராமத்தின் அருகில் வயல்வெளியில் காலை கடனை கழிக்க சென்றார். அப்போது, நள்ளிரவில் வீசிய காற்று மழைக்கு, மின்வயர் அறுந்து கொடியில் விழுந்து இருந்தது. இதை கவனிக்காமல் மண்ணப்பன், அதில் கை வைத்தார். இதில், மின்சாரம் பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்து ஆர்கே பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி, திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.பொன்னேரி : மீஞ்சூர் அடுத்த அத்தைமஞ்சி ரெட்டியர்பாளையத்தை சேர்ந்தவர் அர்ஜுனன். விவசாயி. இவரது மகள் அபர்ணா (16), அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன் தோழியை பார்த்து வருவதாக சென்ற மாணவி, பின்னர் வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் இல்லை. புகாரின்படி காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி மாணவியை யாராவது கடத்தினார்களா அல்லது வேறு காரணமா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர். * மீஞ்சூர் அருகே உள்ள வடசென்னை அனல்மின் நிலையத்தில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள ஜெனரேட்டரை திருடிய வழக்கில் ஜெயசூர்யா, சூர்யா 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அவர்களது கூட்டாளிகள் 2 பேரை காட்டூர் போலீசார் தீவிரமாக தேடுகின்றனர்.  திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த ஊரணம்பேடு பகுதியில் வடசென்னை அனல்மின் நிலையத்தில், நிலை நான்கு கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்த பணியை விமல் (45) என்பவர் ஒப்பந்தம் எடுத்துள்ளார். இங்கு, கடந்த ஒரு வாரத்துக்கு மன், ரூ.8 லட்சம் மதிப்புள்ள ஜெனரேட்டர் திருடுபோனது. புகாரின்படி காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அத்திப்பட்டு, நேரு நகரை சேர்ந்த ஜெயசூர்யா (24). காந்தி நகரை சேர்ந்த சூர்யா (25) ஆகியோரை நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.8 லட்சம் மதிப்புள்ள ஜெனரேட்டரை பறிமுதல் செய்தனர். இவர்களது கூட்டாளிகள் அத்திப்பட்டு, கலைஞர் நகர் அமிர்தராஜ் (28), வினோத் (25) ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்….

Related posts

மேட்டுப்பாளையம் – கோவை மெமு ரயிலில் பெண்களை ஆபாச படம் எடுத்த வழக்கறிஞர் கைது

16 வீடுகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட முகமூடி கொள்ளையர்கள் :தட்டி தூக்கிய போலீஸ்!

மதுபோதையில் தகராறு செய்த கணவனை கூலிப்படை ஏவி தீர்த்து கட்டிய மனைவி: தர்மபுரி அருகே பரபரப்பு